விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இணையும் புதிய கூட்டணி!

சமீபத்தில் வெளியான கொலைகாரன் படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். அவருடன் எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார், கமல் போரா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தற்போது, அக்னி சிறகுகள், தமிழ்செல்வன், காக்கி படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அந்த படங்களை முடித்து கொடுத்து விட்டு இந்தப் படத்தில் இணைகிறார். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். விஜய் மில்டனின் கோலி சோடா பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2, படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அவர் விஜய் ஆண்டனியை இயக்குகிறார்.

இது கடற்கரை ஒட்டிய கதை களத்தை கொண்ட படம் என்பதால் கோவா, சென்னை உள்ளிட்ட கடற்கரை நகரங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்கிறது. அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது நடிகர், நடிகைகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Comments