இளையராஜா பாடல்களுக்கு தடை!

இளையராஜா இசையமைத்த பாடல்களை, அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்த தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த நிரந்திர தடை விதித்து நீதிபதி அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அவரது பாடல்களை திரையரங்குகளை தவிர வேறு எங்கும் பயன்படுத்த கூடாது எனவும் குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் உள்ளிட்டவைகளில் இளையராஜாவின் அனுமதி பெறாமல் அவரது பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
 
இளையராஜாவின் பாடல்களுக்கு 10 ஆண்டிற்கான உரிமை உள்ளதால், பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு அகி இசை நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி அனிதா சுமந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Comments