பல்வேறு பிரச்னைகளை கடந்து நடிகர் சங்க தேர்தல் விறுவிறு ஓட்டுபதிவு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்னைகளை கடந்து சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது.
 
இரு அணிகள் போட்டி..
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019 - 22ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. மொத்தம், 3,644 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; அதில், 3,171 பேர், ஓட்டளிக்

பாண்டவர் அணியில், தலைவர் பதவிக்கு நாசர்; பொதுச்செயலருக்கு, விஷால்; பொருளாளர் பதவிக்கு, கார்த்தி போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிகளுக்கு, கருணாஸ், பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். சுவாமி சங்கர தாஸ் அணியில், தலை வர் பதவிக்கு பாக்யராஜ்; பொதுச்செயலர் பதவிக்கு ஐசரி கணேஷ்; பொருளாளர் பதவிக்கு பிரசாந்த்; துணை தலைவர் பதவிகளுக்கு, குட்டி பத்மினி, உதயா போட்டியிடுகின்றனர்.

தேர்தல் திடீர் ரத்து..
முன்னதாக, சென்னை, அடையாறில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லூரியில், இன்று தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, 61 பேர், தேர்தலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், மாவட்ட சங்க பதிவாளரிடமும் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், தேர்தலை ரத்து செய்து, சங்கப் பதிவாளர் உத்தரவிட்டார்.

தேர்தல் நடத்த கோர்ட் அனுமதி..
இதை எதிர்த்து, விஷால் அணி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையில், 61 பேரை நீக்கியது செல்லும் என்று, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், தேர்தலை, 23ம் தேதி நடத்த தடையில்லை என, அறிவித்து, ஓட்டு எண்ணிக்கையை மட்டும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.

7.10க்கு ஓட்டு பதிவு துவங்கியது..
நீதிமன்ற உத்தரவை அடுத்து, தேர்தல் அதிகாரி பத்மநாபன், மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில், தேர்தல் நடக்கும் என, அறிவித்தார். அதன்படி, இன்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதற்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஆர்வமுடன் ஓட்டளித்த பிரபலங்கள்
விஜய், நாசர், விஷால், குஷ்பு, சுந்தர் சி, கார்த்தி, மன்சூர் அலிகான், கே.ஆர்.விஜயா, ரோகிணி, செம்மீன் ஷீலா, அம்பிகா, ராதா, பொன்வண்ணன், சரண்யா, சாந்தனு, பாக்யராஜ், பூர்ணிமா, ஐசரி கணேஷ், ராம்கி, சார்லி, ரமேஷ் கண்ணா, பிரஷாந்த், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த், பசுபதி, ஷாம், மோகன், லதா, சங்கீதா, உதயா, கோவை சரளா, ஜின்னி ஜெயந்தி, அருண் பாண்டியன், கே.ராஜன், கேஎஸ்.ரவிக்குமார், ரமணா, குட்டி பத்மினி, ஆர்த்தி, கணேஷ், தளபதி தினேஷ், பிரேம், ராஜேஷ், விஷார்த், முத்துக்காளை, அழகு, சிவகுமார், சூர்யா, மயில்சாமி, ரகுமான், சங்கீதா, சிபிராஜ், தேவதர்ஷினி, ரவி மரியா, டெல்லி கணேஷ், வையாபுரி, வெண்ணிறாடை மூர்த்தி, சச்சு, வெண்ணிறாடை நிர்மலா, பார்த்திபன், காயத்ரி ரகுராம், வடிவுக்கரசி, அஜய் ரத்னம், மனோபாலா, பிரகாஷ் ராஜ், விவேக், சரத்பாபு, விந்தியா, சந்தானபாரதி, சஞ்சய்பாரதி, செந்தில், வால்டர், ஹரிஷ் கல்யாண், பசி சத்யா, விஜய குமார், கவிஞர் பிறைசூடன், சஞ்சனா சிங், விசு, எம்என் ராஜம், கேஆர் வட்சலா, ராகசுதா, இளவரசு, விஜய்பாபு, கஞ்சாகருப்பு, நித்யா, ஜெயபாரதி, பப்லு, சுஹாசினி, கிருபா மாஸ்டர், ஆர்.சுந்தர்ராஜன், விக்ராந்த், கவுண்டமணி உள்ளிட்ட பல கலைஞர்கள் ஓட்டளித்தனர். காலை 11.30 மணியளவில் 845 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

தபால் ஓட்டுக்கள் சிக்கல்..
தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு, நேற்று மாலை முடிவடைந்தது. ஆனால் தபால் ஓட்டுக்கள் சரியாக போய் சேரவில்லை. இதனால் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் ஓட்டுபோட முடியவில்லை. தான் ஓட்டு போட முடியாததை நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு டுவிட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
க தகுதி உடையவர்கள். தேர்தலில், விஷால் தலைமையிலான, பாண்டவர் அணியும்; பாக்யராஜ் தலைமையிலான, சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

Comments