'2.0' படம் ஜுலை 12ம் தேதி:,56000 காட்சிகளை, தியேட்டர்கள் என்கிறதா 2.0 குழு?

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படம் ஜுலை 12ம் தேதி, சீனாவில் 56000 ஸ்கிரீன்களில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ரகுமான் அவரது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

சீனாவைப் பொறுத்தவரையில் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கைக்குக் பதிலாக அதன் காட்சிகளைத்தான் குறிப்பிடுவார்கள். ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகள் திரையிடப்படுகிறது. மொத்தமாக எத்தனை காட்சிகளில் எவ்வளவு வசூலானது என்பதுதான் அவர்களின் திரையுலக வசூல் கணக்காக இருக்கும்.

இணையதளத் தகவல்படி சீனாவில் 2019ம் ஆண்டில் 66000 தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் 56000 தியேட்டர்களில் '2.0' படம் வெளியாக உள்ளது என்பது நம்பும்படியாக இல்லை. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்றால் கூட 2,24,000 காட்சிகள். 200 இருக்கைகள் கொண்ட ஒரு தியேட்டரில் டிக்கெட் கட்டணம் சராசரியாக 40 யென் இருந்தால் ஒரு காட்சிக்கு 8000 யென்கள். இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 80,000 ரூபாய். ஒரு காட்சிக்கு 80000 ரூபாய் என்றால் 4 காட்சிகளுக்கு 3,20,000 ரூபாய். ஒரு தியேட்டரில் ஒரு நாள் வசூலாக 3,20,000 ரூபாய் என்றால் 56,000 தியேட்டர்களுக்கு 1792,00,00,000 கோடி. இது நம்பும்படியாகவா இருக்கிறது. சீனாவில் ஒரு டிக்கெட் கட்டணம் 25 முதல் 55 யென் வரை உள்ளது.

சீனாவில் இதுவரையில் அதிகபட்சமாக வசூலித்த இந்தியப் படமான 'தங்கல்' படத்தின் ஒரு மாத மொத்த வசூலே 1200 கோடிதான். 'தங்கல்' படம் அங்கு 9000 காட்சிகள் மட்டும்தான் வெளியானது. அதன் முதல் நாள் வசூல் 15 கோடிதான்.

2.0 படத்திற்கு மொத்தமாக 56000 காட்சிகள் வரையில் தான் திரையிடக் கிடைத்திருக்கும். தங்கல் கணக்குப்படியே கூட்டி கழித்து பார்த்தால், 2.0 படத்தின் முதல்நாள் வசூல் ரூ.90 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. அவ்வளவு காட்சிகளும் அதன்பின்னர் அடுத்தடுத்த நாட்களிலும் 56000 காட்சிகள் தொடருமா என்பது சந்தேகம்.

தமிழ் ரசிகர்களுக்கு சீனாவில் வெளியிடப்படும் திரையீட்டு முறை பற்றித் தெரியாது. எனவே 2.0 படக்குழுவினர் சீனா வெளியீடு பற்றி தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டால் நல்லது.

Comments