அரவிந்த்சாமி-சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதிய படம் துவங்கியது!

தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும்போதே  அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது நடிகர் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் படம் பற்றிய முதல் அறிவிப்பு. ஹர ஹர மகாதேவி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்ந்’ ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.
Etctera entertainment சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
காட்சிகளுக்கான உணர்வை பின்னணி இசையிலும் பாடல்களிலும்  கச்சிதமாக கொண்டு வரும் டி.இமான்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பள்ளு ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத் தொகுப்பு செய்கிறார். கலை இயக்கம் – செந்தில் ராகவன், சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும், பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது.
 
இன்னமும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னை பிரசாத் லேப்பில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.இந்தப் பூஜை நிகழ்ச்சியில் படத்தின்  ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார், தயாரிப்பாளர் V.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மேலும், நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் இயக்குநர் U.R ஜமீல், இயக்குநர் ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல்ராஜா, சக்திவேல் பிலிம் பேக்டரி B.சக்திவேலன், தங்கராஜ் ஆகியோரும் இந்த பட பூஜையில் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்.
 
படத்தின் கதையை தன் போக்கிற்கு கொண்டு செல்லாமல் ரசிகனின் ரசனை அறிந்து கொண்டு செல்லும்போது அந்தப்படம் நிச்சயம் வெற்றிக் கோட்டை அடையும். அப்படியான படமாகத்தான் இந்தப் புதிய படம் துவங்கி இருக்கிறது.
 
நடிகர் அரவிந்த்சாமி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றால் அந்தப் படம் கவனிக்கப்படும் படமாகத்தான் இருக்கும். டிடைக்டிவ் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தக் கதையில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
 
தயாரிப்பாளர் V.மதியழகன் இதுவரை தயாரித்தப் படங்களில் இந்தப் படம் தொழிழ் நுட்ப ரீதியாகவும், பிரம்மாண்ட படைப்பாக்கத்திலும் மிகப் பெரிய படமாக உருவாக இருக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் மாதம் துவங்க உள்ளது. 

Comments