தேடி வந்த கனடா நாட்டு குடியுரிமையை தூக்கி வீசிய ஏ ஆர் ரகுமான்!

இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உலகம் முழுவதும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார், இவரின் பாடலுக்கு மயங்காதவர்கள் இல்லை, பல விருதுகளை வென்றாலும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அமைதியை கடைபிடிப்பவர்.சமீபத்தில் அக்ஷய் குமாருக்கு கனடா உரிமை கிடைத்தது மிகவும் பரபரப்பு பே
சப்பட்டது, அதேபோல் இசையமைப்பாளர் ரகுமானுக்கு  கனடா உரிமை தேடி வந்தது, ஆனால் ஏ ஆர் ரகுமான் கனடா நாட்டின் மேயருக்கு டுவிட்டரில் பதில் அளித்திருந்தார், ரகுமான் கூறிய பதில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
 
ரஹ்மான் கூறியதாவது கனடா குடியுரிமை கொடுக்க முன்வந்த மேயருக்கு எனது நன்றி, தமிழ்நாட்டில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், இந்தியா தான் எனது நாடு, என் மக்கள் மற்றும் நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள் என பதில் அளித்துள்ளார்.ரகுமான் இப்படி கூறியதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் ரீட்வீட் செய்து வருகிறார்கள்.

Comments