சூர்யாவின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘போதை ஏறி புத்தி மாறி’ இயக்குநர்!

ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் சார்பி ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்கும் இப்படத்தில் தீரஜ், துஷாரா, பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 45 நொடிகளே ஓடும் இந்த டீசர் வித்தியாசமான

முறையில் உருவாக்கப்பட்டதே வரவேற்புக்கான காரணமாகும். மேலும், டீசை வெளியிட்ட நடிகர் சூர்யா, தனிப்பட்ட முறையில் படக்குழுவினரையும், டீசர் உருவாக்கப்பட்ட முறையையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
 
சூர்யாவின் பாராட்டினால் உற்சாகமடைந்துள்ள இயக்குநர் கே.ஆர்.சந்துரு இது குறித்து கூறுகையில், “முதலில், எங்கள் டீசரை அறிமுகப்படுத்த முழு மனதுடன் ஒப்புக் கொண்ட சூர்யா சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற ஒரு சிறிய படத்தை ஆதரிக்க அவர் ஆர்வம் காட்டுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் அவர் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தினார். இது சமூக ஊடகப் பக்கத்தில் சாதாரண வார்த்தைகளை பற்றியது அல்ல, இந்த டீசரை பார்த்து தனிப்பட்ட முறையில் மனதாரால் பாராட்டினார்.
 
டீசர்கள் ஒரு திரைப்படத்தை ஊக்குவிப்பதில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில், பெரிய நடிகர்களோ அல்லது கலைஞர்களோ இல்லாத போதும், டீசர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கும் பல நிகழ்வுகளை நாம் சந்தித்திருக்கிறோம். இதுவே போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசரை முன்வைப்பதற்கான உற்சாகத்தை எங்களுக்கு வழங்கியது. டீசரை 45 நொடிகள் கால அளவில் வழங்க முடிவு செய்தபோது, படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் டீசரில் கொண்டு வருவதை நாங்கள் கடுமையான சவாலாக எடுத்துக் கொண்டோம். எனவே, டீசரின் முதல் சில விநாடிகளுக்கு நாயகனை (தீரஜ்) மட்டுமே காட்ட முடிவு செய்தோம், பின்னர் அடுத்த பாதியில் மீதமுள்ள கதாபாத்திரங்களை காட்ட நினைத்தோம். டீசர் பார்த்த பலரும் நாங்கள் சொல்ல நினைத்ததை சரியாக புரிந்து கொண்டிருப்பதோடு, எங்களை வெகுவாக பாராட்டினர். படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிட இருக்கிறோம், அதில் படத்தின் கரு மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.” என்றார்.
 
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.பீ இசையமைத்திருக்கிறார். அறிவு, முத்தமிழ், சுதன் பாலா ஆகியோர் பாடல்கள் எழுத, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். கோபி ஆனந்த் கலையை நிர்மாணிக்க, ரக்கர் ராம்குமார் சண்டைப்பயிற்சி மேற்கொள்கிறார். ஷெரிஃப் நடனம் அமைக்க, பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பு பணியை கவனிக்கிறார்.

Comments