ராகுல்,மம்தா ராஜினாமா நாடகம் : டைரக்டர் கிண்டல்!

Anurag Kashyap takes a sly dig at Mamata Banerjee and Rahul Gandhi amid their resignation chaos!
காங்., தலைவர் ராகுல் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பியதையும், அதை அவர்களின் கட்சியினர் ஏற்க மறுத்ததையும் பாலிவுட் சினிமா
டைரக்டர் அனுராக் காஷ்யாப் டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.லோக்சபா தேர்தலில் மிக மோசமாக காங்., கட்சி தோல்வி அடைந்ததால், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக போவதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் அறிவித்தார். இது குறித்து விவாதிப்பதற்காக கூடிய கட்சியின் செயற்குழுவில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதனை ஏற்க மறுத்ததுடன், ராகுலே கட்சி தலைவராக தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டதால் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

இதே போன்று மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்., பெற்ற தோல்வியால் இனி தான் முதல்வர் பதவியில் தொடர விரும்பவில்லை என மம்தா கூறினார். அவரது கட்சி நிர்வாகிகளும் இதனை ஏற்க மறுத்ததால், மம்தாவும் முடிவை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாலிவுட் சினிமாவின் பிரபல டைரக்டர் அனுராக் காஷ்யாப் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளர். அதில், மம்தா ராஜினாமா செய்ய விரும்பினார். ஆனால் அவரது கட்சி அதனை ஏற்க மறுத்தது. ராகுலும் ராஜினாமா செய்ய விரும்பினார். ஆனால் அவரது கட்சியும் அதை ஏற்க மறுத்தது. நாங்களும் இந்த செயல்பாட்டை பாராட்ட விரும்புகிறோம். ஆனால் எங்களின் அறிவுத்திறன் இதனை நம்ப மறுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
 
Anurag Kashyap takes a sly dig at Mamata Banerjee and Rahul Gandhi amid their resignation chaos!
 
It was on May 23, 2019, when opposition witnessed the Modi Tsunami as Prime Minister Narendra Modi won more than 350 seats in the Lok Sabha Elections 2019. Following his gigantic triumph, his well-wishers flooded the internet with congratulatory messages for him and his party. Among the many was Bollywood filmmaker Anurag Kashyap who congratulated Modi, but along with it also raised a complaint. The filmmaker, who is known to speak his mind, mentioned how his daughter was being threatened by a die-hard follower of the PM. That being said, on Saturday, Kashyap through his Twitter account took a dig at political parties, whose head honchos were trying to grab headlines.
 
In the tweet, the filmmaker mentioned two political leaders': Mamata Banerjee (Cheif Minister of West Bengal) and Rahul Gandhi (President of Congress). He mentioned how the two leaders (after the defeat at the hands of BJP) were in a mood to quit their party and so decided to resign. But as we all know, ultimately the 'resignation' hoopla was fabricated and that's what Kashyap's tweet pointed out. Kashyap also added how he never wanted to bring this information on the micro-blogging site but Twitterati rejected his intention and here he is. All we can say is, he is a smart director for sure.

Comments