மோடியாய நமஹ’ ! ரஜினி ஓப்பன் பேட்டி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு, அவருடைய தலைமைக்குக் கிடைத்த வெற்றி. இந்தியாவில் நேருவுக்குப் பிறகு இந்திரா, இந்திராவுக்குப் பிறகு ராஜீவ், அதற்குப் பிறகு வாஜ்பாய், இப்போது மோடி என்ற மக்களை வசீகரிக்கிற தலைவர் வந்திருக்கிறார். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி ஜனரஞ்சகத் தலைவர் மோடி”என்று ரஜினி தெரிவித்துள்ளார்

பார்லிமெண்ட் தேர்தலில் 303 இடங்களில் வென்ற பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்க பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். அதேபோல், தமிழகத்தில் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கும் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதேநேரம், மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று தகவல் வந்தது.
 
இந்தநிலையில்,நேற்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க வெற்றி குறித்து கேள்விக்கு பதிலளித்த போது , `இது மோடி என்ற தனிமனிதரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி. பொதுவாகவே தேசிய அளவில் என்றாலும் மாநில அளவிலும் ஒரு தலைவரின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை வைத்தே அவரது கட்சிக்கு வெற்றிகிட்டும்.
தேசிய அரசியலில் நேருவுக்குப் பின்னர் இந்திரா காந்தி, அவருக்குப் பின்னர் ராஜீவ் காந்தி போன்ற பெரிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னர் வாஜ்பாய் அந்த இடத்தில் இருந்தார். அவர்கள் வரிசையில் இப்போது மோடி இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதைவைத்துப் பார்க்கும்போது மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி இது. தமிழகத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் நதிகளை இணைப்போம் என்று கூறியிருக்கும் நிதின் கட்கரியின் கருத்தை நான் வரவேற்கிறேன்” என்றார்.
 
அப்படி என்றால் க்தமிழக தேர்தல் முடிவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, “இந்திய அளவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது. அரசியலில் அதுபோன்ற ஒரு அலை வீசும் சூழலில், அதற்கு எதிராக யாரும் நீந்த முடியாது. அவர்கள் அந்த அலையால் அடித்துச் செல்லப்படுவார்கள். அலையின் போக்கோடு நீந்திச் செல்பவர்களே வெல்வார்கள்’ என்றார்.
 
மேலும் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசக் காரணம் குறித்து பேசிய ரஜினி, “மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், நீட் தேர்வு மற்றும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட சூறாவளிப் பிரசாரம் ஆகியவை காரணம்” என்றார், கமல்ஹாசன் குறித்து பேசிய ரஜினி, `கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஏறக்குறைய 4 சதவிகித வாக்குகள் வாங்கி யிருக்கிறார் கமல். அது கணிசமான எண்ணிக்கை. அவருக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.
 
தொடந்து ராகுல் காந்தி குறித்து பேசிய அவர், “ராகுல் காந்தியிடம் தலைமைப் பண்புகள் இல்லை என நான் கூற மாட்டேன். காங்கிரஸ் போன்ற பழைமையான கட்சிகளை வழிநடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். மூத்த தலைவர்கள் பலரைக் கொண்ட அதுபோன்ற ஒரு கட்சியை ஒரு வழிநடத்துவது இளையவரான அவருக்குக் கடினமானது. நான் கவனித்தவரை, ராகுல் காந்திக்குக் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் உரிய முறையில் ஒத்துழைப்புக்கொடுக்கவில்லை. அவர்கள் கடினமான உழைப்பைக் கொடுக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. குறிப்ப்பாக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகக் கூடாது. அந்தப் பதவியில் இருந்துகொண்டு, அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எதிர்க்கட்சியும் அவ்வளவு முக்கியமானது. எதிர்க்கட்சிகள் வலுவாகக் களத்தில் நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

Comments