எனக்கு தீனி போட்ட படம்’ ஜிப்ஸி: ஜீவா நெகிழ்ச்சி!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’, இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு எளியமனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தை கொண்டது இப்புத்தகம். அதேபோல் ஜிப்ஸி படமும் அந்தக்களத்தை தாங்கி நிற்கக் கூடியதே.
 
விழாவில் இசை அமைப்பாளர்கள் டி.இமான். சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, மீரா கதிரவன். மாரி செல்வராஜ். சரவண ராஜேந்திரன், கோபிநயினார் சீனு ராமசாமி, கரு.பழனியப்பன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி சௌத்ரி, ராஜசேகரபாண்டியன், மதன், எஸ்.ஆர் பிரபு. கேமராமேன் செல்வா, மலையாள இயக்குநர் லால்ஜோஸ், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 
இந்நிகழச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது, ‘ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி. ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன்.
இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன்.
 
இதில் ராஜுமுருகன் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும்.ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும் என்றார்.

Comments