நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி!

இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று வாக்கு என்னிக்கை நடந்து வருகிறது. பரபரப்பாக நடந்துவரும் வாக்கு என்னிக்கையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க கட்சி 350 இடங்களில் முன்னிலைப்பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்ற கட்சிகள் 103 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க பெரும்பாண்மையன இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் பல தரப்பில் இருந்தும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் நரேந்திர மோடிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டிருக்கிறார்.முன்னதாக தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை பிரதமல் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments