வதந்திகளை நண்பாதீர்கள் கடுப்பான தளபதி 63 படக்குழு!

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக மேயாதமான் பட நாயகி இந்துஜா நடிக்கிறார். சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து, கதை திருட்டு விவகாரம், படத்தில் பணியாற்றிய துணை நடிகையின் புகார் என படத்தை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளிட்டிருக்கிறது,
 
தளபதி 63 படத்தின் சூட்டிங் தொடர்ந்து 70 நாட்களாக நடந்து வருகிறது. தற்போது 4-வது கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. எங்களுடைய கடின உழைப்பு எல்லாம் தியேட்டரில் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்காக. படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments