அதிக வசூல்: டாப் 10 – ல் விஸ்வாசம் 8 ஆவது இடம்!

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 10 படங்களின் பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் 8 ஆவது இடம் பிடித்துள்ளது.தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ படங்கள் வெளியாகி வருகிறது. அதில், பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்
படங்களாகவும் அமைகிறது. இதில், ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று மாஸ் ஹீரோக்களின் படங்களும் அடங்கும்.தற்போது வரும் சினிமாவை பார்க்கும் போது ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு இணையாக

பல படங்கள் வருகிறது. இந்த நிலையில், தமிழில், அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.2.0 ரூ. 800 கோடி, எந்திரன் ரூ.290 கோடி, கபாலி ரூ.285 கோடி , சர்கார் ரூ.260 கோடி, மெர்சல் ரூ.260 கோடி, ஐ ரூ.243 கோடி, பேட்ட ரூ.225 கோடி, விஸ்வாசம் ரூ.200 கோடி, காலா ரூ.160 கோடி, தெறி ரூ.154 கோடி .

Comments