இது கபாலி 2 அல்ல: இயக்குநர் பா. இரஞ்சித் விளக்கம்!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து அண்மையில் வெளியான “கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.






இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கபாலி படத்துக்குப் பின் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் சா
ர்பில் தயாரிக்கிறார்.
 
தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கள்கிழமை இரவு பதிவிட்ட ஒரு வீடியோ பதிவின் மூலம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இத்தகவலை இயக்குநர் பா. இரஞ்சித் மறுத்துள்ளார்.
 
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இது கபாலி 2 அல்ல. புதிய கதையை ரஜினியிடம் சொன்னவுடன் அவருக்குப் பிடித்துப் போனது. அதனால் இருவரும் மீண்டும் இணைகிறோம் என்று கூறியுள்ளார்.

Comments