நடிகர் நகுலுக்கு திருமணம் - நிச்சயதார்த்தம் முடிந்தது!!!

Saturday, November 14, 2015
Chennai:பாய்ஸ்’ படத்தில் நடிகராக அறிமுமகான நகுல், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய சமீபத்திய படங்களான ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நகுலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும், நகுலுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.
நடிகர் நகுல் நடிகை தேவையானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments