புதிய படம் ஒன்றில், மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் அமலா!!!

Thursday, November 5, 2015
Chennai:தூங்கா வனம்’ படத்திற்குப் பிறகு கமல் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றில், அமலா நடிக்கிறார். ‘சத்யா’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அமலா, பல ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்.

ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அமலா தனதுடன் இணைந்து நடிப்பதை தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜரினா வஹாப்பும் நடிக்கிறாராம். இவர்களுடம் மேலும் ஒரு முன்னணி நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1989ஆம் ஆண்டு, கமலை வைத்து ‘சாணக்யன்’ என்ற படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இப்படத்தை இயக்குகிறார். மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் அமெரிக்காவில் தொடங்குகிறதாம்.

Comments