செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!!!

Thursday, November 5, 2015
Chennai:தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நானும் ரெளடி தான்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் நயந்தாரா நடித்திருந்தார். அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களும் பெரும் வெற்றியடைந்தது.

இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறாராம்.
தற்போது சிம்புவை வைத்து ‘கான்’ படத்தை இயக்கி வரும் செல்வராகவன், இப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறாராம்.

Comments