எந்திரன் 2 - அர்னால்டை சந்திக்க அமெரிக்கா புறப்படும் ரஜினி!!!

Friday, November 6, 2015
Chennai:ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், பெரும் பொருட்ச் செலவில் தாயரான ‘எந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது ‘இந்திரன் 2’ படத்தை ஷங்கர் இயக்க, இதில் ரஜினி நடிக்கிறார். வில்லனாக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக செய்திகள் வெளியாயின.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அர்னால்டு நடிப்பது, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நம்பதகுந்த வட்டாரங்கள் அர்னால்டு நடிப்பது உறுதி தான் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது ‘கபாலி’ படத்திற்காக மலேசியாவில் இருக்கும் ரஜினிகாந்த், அர்னால்டை சந்திப்பதற்காக, இம்மாதம் 26ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அவருடன் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைக்கா அதிகாரிகளும் செல்கிறார்களாம்.
அர்னால்டை சந்திக்கும் ‘எந்திரன் 2’ படக்குழுவினர், படத்தில் அவரது கேரக்டர், கால்ஷீட் மற்றும் சம்பளம் குறித்து பேசிவிட்டு, படத்திற்கான சிறு போட்டோ ஷூட் ஒன்றையும் எடுக்கப் போகிறார்களாம்.

Comments