நடிகர் சங்க தேர்தல் இறுதி முடிவு : சரத்குமாருக்கு 4, விஷாலுக்கு 25!!! Advocate Bathmanathan Gave Certificate To Paandavar Ani Team Photos

20 October 2015
சென்னை:தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 2015-2018ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. 
இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. சரத்குமார் தலைவர் பதவிக்கும், அவரது அணியில் செயலாளர் பதவிக்கு ராதாரவியும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியின்னர்.

நாசர் தலைவர் பதவிக்கும், அவரது அணியில் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 மணிக்கு வாக்கு பதிவு முடிந்ததும், 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது, சரத்குமார் அணியினர் முன்னிலை வகித்தனர். ஆனால், முடிவில் நாசர் தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்றனர். தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் உளிட்ட முக்கிய பொறுப்புகளில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
மொத்தம் 29 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை 4 மணியளவில்தான் முழுமையாக முடிவடைந்துள்ளது. 
இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரப்படி, தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 20 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 25 பேர் விஷால் அணியை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். சரத்குமார் அணியை சேர்ந்த 4 பேர் மட்டும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 
24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட விஷால் அணியினரில் நந்தா, விக்னேஷ், கோவை சரளா, குட்டி பத்மினி உள்ளிட்ட 20 பேர் வெற்றி பெற்றனர். சரத்குமார் அணியினரில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய நான்கு பேர் மட்டும் வெற்றி பெற்றனர்.
 

 

 

 

 

Comments