ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்: நடிகர்களிடம் கருணாஸ் கெஞ்சல்!!!

19th of September 2015
சென்னை:காரைக்குடி:“ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்,” என காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட நாடக நடிகர்களை சந்தித்து நடிகர் கருணாஸ் ஆதரவு கோரினார்.

சிவகங்கை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் உள்ளனர். இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் 35-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். காரைக்குடியில் செயல்பட்டு வரும் இசை நாடக அமைப்பாளர் சங்கத்தை சேர்ந்த 24 பேர் திரைப்பட நடிகர் சங்கத்தில் உ
றுப்பினர்களாக உள்ளனர்.


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் கடந்த ஜூனில் நடிகர் விஷால் காரைக்குடியில் முகாமிட்டார். ஆனால், “மன்சூர் அலிகான் நாடக நடிகர்கள் குறித்து பேசியதற்கு எந்த நடிகரும் கண்டனம் தெரிவிக்கவில்லை, ஒற்றுமையாக இரு சங்கமும் செயல்பட வேண்டும்,” என்பதற்காக அவரை சந்திக்க மறுத்தனர்.

தொடர்ந்து நடிகர் ரித்தீஷ் இசை நாடக நடிகர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விஷாலுக்கு ஆதரவு கோரினார். அவர்கள் தற்போதைக்கு எவ்வித முடிவும் எடுக்க முடியாது என்றனர். இதற்கு மற்றொரு காரணம், நாடக நடிகர்களை உறுப்பினராக அங்கீகரித்தது நடிகர் ராதாரவி தான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் கருணாஸ் காரைக்குடியில் இசை நாடக அமைப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம், தற்போதைய திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக கோலோச்சி வருபவர்கள், இதுவரை ஏன் நாடக நடிகர்கள் முன்னேற நடவடிக்கை எடுக்கவில்லை, உரிய கட்டடம் கட்டவில்லை, வெப்சைட் பிரிவில் அனைத்து நாடக நடிகர்களின் விபரங்களை சேர்க்கவில்லை. இதனால் நாடக நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

உறுப்பினர் சந்தாவாக நடிகர்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பெறப்படுகிறது. ஆனால், இதுவரை நடிகர் சங்க கடனை அடைக்காமல் உள்ளனர். வாங்கியதற்கு சரியான கணக்கும் இல்லை, என பேசியுள்ளார்.காரைக்குடி இசை நாடக நடிகர் சங்க தலைவரும் அனைத்து இசை நாடக நடிகர் சங்க கூட்டமைப்பு பொது செயலாளருமான காந்தியிடம் கேட்டபோது, “நடிகர் கருணாஸ் எங்களிடம் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்” என ஆதரவு கேட்டு சென்றுள்ளார், என்றார்.

Comments