த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இப்படிப்பட்ட படமா..??!!!

17th of September 2015
சென்னை:ஜி.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், கயல் ஆனந்தி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது, அதோடு சென்சார் போர்டும் படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளதால் ஆண் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டம்
என்றாலும் ஜிவி பிரகாஷிற்கு இருக்கும் ஒன்று இரண்டு பெண் ரசிகர்களும் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு டாட்டா சொல்லிவிடுவார்கள் என கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் பார்க்காதது போல் இருக்குமாம். இந்த கிளைமேக்ஸை பலரும் வேண்டாம் என்று கூறினாலும், இயக்குனர் ஆதிக் மிக தைரியமாக இதை வைத்துள்ளாராம்.

Comments