அரண்மனை – 2’வுக்காக உருவாக்கிய 1௦3 அடி அம்மன் சிலை!!!

27th of September 2015
சென்னை:சுந்தர்.சி இயக்கத்தில் வளர்ந்துவரும் அரண்மனை-2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக பிரமாண்டமான அம்மன் சிலை ஒன்று தேவைப்பட்டது. முதலில் இதை கிராபிக்ஸில் பண்ணலாம் என்றுதான் சுந்தர்.சி நினைத்தாராம்.. ஆனால் படத்தின் கலை இயக்குனர் குருராஜ் கிராபிக்ஸ் வேண்டாம், உண்மையான சிலையையே செய்துவிடாலாம் என இதை சவாலாக எடுத்துக்கொண்டு 103 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கியுள்ளார்.

இந்த அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிக பெரிய அம்மன் சிலையாக உருவாகியுள்ளதாம்.. இதைவிட உயரமான அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்பதால் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இந்த சாதனை இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை உருவாக்க கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் ஆனதாம்.

முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் இந்த நாற்பது நாட்களும் விரதம் இருந்து குருராஜும் அவரது குழுவினரும் இந்த சிலையை உருவாக்கியுள்ளனர். இப்போது இந்த சிலை முன் நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் தலைமையில் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.


Comments