சீரியஸ் + சீரியஸ் = காமெடி’ சவாலை சமாளிக்க சத்யாசிவாவின் பார்முலா!!!

7th of August 2015
சென்னை:தனது முதல் படைப்பான ‘கழுகு’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சத்யசிவா, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. முதல் படத்தில் சீரியஸாக கதைசொல்லி ரசிகர்களின் மனதை கனக்க வைத்த சத்யசிவா, இந்தப்படத்தில் அவுட் அன்ட் அவுட் காமெடி கலாட்டா பண்ண வருகிறார்..

அசோக் செல்வன், ஜெகன் கூட்டணியுடன் சத்யசிவாவின் ‘கழுகு’ கூட்டணியான பிந்து மாதவி, கருணாஸ் இருவரும் இதில் பயணித்துள்ளார்கள். இவர்கள் தவிர நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, மனோபாலா, கஞ்சா கருப்பு ஆகியோரும் உண்டு.. நமது poonthalirkollywoodக்காக படம் பற்றி நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார் சத்யசிவா…
 
என்ன திடீர்னு காமெடியில் இறங்கிட்டீங்க..?
 
நிறைய பேர் இப்படித்தான் கேட்குறாங்க.. நான் பேசிக்கலாவே காமெடியான ஆளுதான். என்னோட முதல் படத்தைக்கூட சீரியசான காமெடி படம்னுதான் சொல்லுவாங்க.. எனக்கு எப்பவும் ஒரே ஜெனர்ல படம் பண்றதுல விருப்பம் இல்ல.. அதுதான் இந்த முறை காமெடியை ட்ரை பண்ணுவோம்னு இறங்கிருக்கேன்.. நல்லாவே ஒர்க் அவுட் ஆகிருக்கு.
 
முதல் படத்திற்கு ரஜினி டைட்டில்.. இந்தப்படத்திற்கு சிவாஜி டைட்டிலா..?
 
இரண்டு படங்களுக்குமே கதைக்கு தேவைப்பட்டதால் தான் இந்த டைட்டில்களை வைத்துள்ளோம்.. இந்தப் படத்துக்கும் நிறைய யோசிச்சோம். பொதுவா மற்றவர்களுடன் படம் பற்றி பேசும் போது பேச்சுவாக்கில், “இத்தனை சவால்களை சமாளிச்சுத்தான் வரவேண்டியிருக்கா” என்று கேட்பார்கள்.. அதனால் இந்தப்படத்தின் கதைக்கும் ‘சவாலே சமாளி’ பொருத்தமாக இருந்ததால் அதையே வைத்துள்ளோம்.. அவ்வளவுதான்.
 
கதையில் அப்படியென்ன சவால் இருக்கிறது..?
 
ஒரு சாதாரண சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் அசோக் செல்வனும் ஜெகனும், ஏதோ கோக்குமாக்காக ஒரு ஐடியா பண்ணி சேனலை திடீரென பிரபலமக்கிவிடுகிறார்கள்.. சரி இத்தனை நாள் பொய்யாக இருந்து சேனலை வளர்த்தோம்.. இனி உண்மையாக இருக்கலாம் என நினைக்கிறார்கள்.. ஆனால் அப்போதுதான் அவர்களுக்கு அது அவ்வளவு சுலபமில்லை என தெரிகிறது.. எதிர்ப்படும் சவால்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.
 
அசோக் செல்வன் இதில் உள்ளே வந்தது எப்படி..?
 
இதுவரை அவர் சீரியஸாகத்தான் நடித்திருக்கிறார். நானும் முதல் படத்தை சீரியஸாகத்தான் பண்ணினேன்.. ஆக ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு காமெடி படம் பண்ணினா எப்படி இருக்கும்னு தோணுச்சு.. அதுதான் காரணம்.. இந்தப்படத்துல அசோக்கின் இன்னொரு முகத்தை பார்க்கலாம். அதேமாதிரி படத்துல ஜெகனுக்கும் அசோக் செல்வன் அளவுக்கு ஈக்குவலான கேரக்டர் தான்.
 
மீண்டும் ஹீரோயினாக பிந்துமாதவி…?
 
செண்டிமெண்ட் எதுவும் இல்லை சார்.. சொல்லப்போனா ஒரு படத்துல ஒர்க் பணினவங்ககூட கொஞ்சம் கேப் விட்டுத்தான் அடுத்த படம் பண்ணனும்னு நினைப்பேன்.. என்னோட சிவப்பு படத்துல கூட முதல் பட ஆளுங்க யாரும் இருக்கமாட்டாங்க.. ஆனா இன்னிக்கு நடிக்க தெரிஞ்ச ஹீரோயின்கள் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியும்.. பிந்துமாதவி என்னோட முதல் படத்துல நடிச்சதால அவங்ககிட்ட தேதி கேட்டா ஈஸியா கிடைக்கும்.. அதுமட்டுமல்ல.. அவங்க நடிப்புக்கு முக்கியத்துவம் தர்ற ஆர்ட்டிஸ்ட். அதனால ஒகேன்னுட்டாங்க.
 
ஜெகன் ஹீரோவுக்கு ஈக்குவலாக என்றால் அப்போ கருணாஸ்..?
 
கருணாஸுக்கு கொஞ்ச நேரமே வந்துபோகின்ற, ஆனால் முக்கியமான கேரக்டர்தான்.. ஆனால் அவர் நடித்தது வெறும் நான்கே நாட்கள் தான். என்னுடைய நட்புக்காக வந்து நடித்துக்கொடுத்தார். அவர் மட்டுமல்ல, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா எல்லோருமே, எனக்காக என்று சொல்வதை விட அருண்பாண்டியன் சார் மேல் வைத்துள்ள நட்பு மரியாதைக்காக நடித்துக்கொடுத்துள்ளார்கள்.. ஊர்வசி மேடம் நிறைய காமெடி ரோல்கள் பண்ணியிருந்தாலும் இதில் அவரது காமெடி புதிதாக இருக்கும்..
என்கிற சத்யசிவா படத்தை வரும் செப்டம்பர்-4ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளதால் நம்மிடம் இருந்து விடைபெற்று, மீண்டும் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளில் தீவிரமானார்.

Comments