பாம்பு மனிதனாக மாறுகிறார் லாரன்ஸ்!!!

5th of August 2015
சென்னை:காஞ்சனா-2 வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ள லாரன்ஸ் அவரது அடுத்த இரண்டு படங்களையும் வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் இயக்கப்போகிறார். படத்தின் டைட்டில்களும் “மொட்ட சிவா கெட்ட சிவா” “நாகா” என ஜெர்க் அடிக்க வைக்கும் விதமாக வைத்தும் விட்டார்.

இந்த இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டு முதல் பார்வையிலே ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் லாரன்ஸ், மொட்டையடித்து, முடி நரைத்து வயதான தோற்றத்தில் வருகிறார். திரைப்படம் சமூக கருத்தை வலியுறுத்தி உருவாக இருக்கும் கமர்ஷியல் படமாகும்.
 
நாகா’ படத்தில் பாம்பு மனிதனாக மாற இருக்கும் லாரன்ஸ், இந்த திரைப்படத்தை ‘காஞ்சனா’ படத்தைப் போல ஹாரர் படமாக இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்தப்படங்களை லாரன்ஸ் தனது சொந்த நிறுவனமான ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

Comments