நடிகர் சங்கத்தேர்தல் சரத்துக்கு சிம்பு ஆதரவு!

20th of August 2015
சென்னை:நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார் அணிக்கு, நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவிடம், 'நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு' என, கேட்டதற்கு அவர் கூறியதாவது:

எந்த அணிக்கு ஆதரவு என்று ஏதும் கிடையாது. சரத்குமாருக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. நடிகர் சங்கத்துக்காக கடினமாக உழைத்திருக்கிறார். அவரால் உறுப்பினர்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன.தேர்தலில், நான் சரத்குமார் அணிக்கு ஆதரவாக இருப்பேன் என்பதால், விஷால் அணியினர் எதிரிகள் என, சொல்ல மாட்டேன். தேர்தல் வரை அவர்கள் வேறு அணி. தேர்தல் முடிந்ததும், நாங்கள் அனைவரும் ஒரே அணி. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments