பி’ & ‘சி’ ஆடியன்ஸுக்கு குறிவச்சிருக்கேன்” _சவாலை சமாளிக்க தயார் நிலையில் அசோக் செல்வன்!

9th of August 2015
சென்னை:சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகி, ‘பீட்சா-2’, ‘தெகிடி’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்தவர் அசோக் செல்வன்.. இந்த மூன்று படங்களிலும் சீரியஸ் முகம் காட்டிய அசோக் செல்வன், தற்போது அந்த முகமூடியை கழட்டி எறிந்துவிட்டு ‘சவாலே சமாளி’ படம் மூலம் காமெடி முகம் காட்ட வருகிறார். படத்தின் டப்பிங்கில் இருந்த அசோக் செல்வன் சவாலை சமாளித்த விஷயங்கள் பற்றி நமிடம் பகிர்ந்துகொண்டார்..
சீரியஸ் ரோல் டூ காமெடி.. எப்படி ஜம்ப் ஆனீங்க…?

வரிசையா மூணு படமும் சீரியஸான கேரக்டர் தான்.. பார்க்குறவங்க கூட என்னங்க.. நீங்க சிரிக்கவே மாட்டீங்களான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.. அந்த நேரத்துல தான் சத்யசிவா ‘சவாலே சமாளி’ ஸ்கிரிப்டோட வந்தார்.. இதுவரைக்கும் ‘ஏ’ சென்டர் நடிகனா இருந்த என்னை இந்தப்படம் ‘பி’ & ‘சி’க்கு ஈஸியா கொண்டுபோய் சேர்த்துரும்.

காமெடி கேரக்டர்ல பிட் ஆகிறது கஷ்டமாச்சே.. எப்படி
சமாளிச்சீங்க..?

உண்மைதாங்க.. ஆரம்பத்துல ஷூட்டிங்கோட முதல் ரெண்டு நாள் கொஞ்சம் செட்டாகாமத்தான் இருந்துச்சு.. அப்புறம் சரியாகிருச்சு.. இதுக்காக என்னோட வாய்ஸ், மாடுலேஷன், பாடிலாங்குவேஜ்னு எல்லாத்தையுமே மாத்தியிருக்கேன்.. காமெடில டைமிங் முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்தபடி உள்ள நுழைஞ்சிட்டேன். கூடவே இருந்த ஜெகனும் நல்லா ஒத்துழைச்சாரு.

உங்க ஹீரோயின் பிந்துமாதவி பத்தி சொல்லுங்க..?

அவங்க பீல்டுல எனக்கு கொஞ்சம் சீனியர்.. ஆனா ஸ்பாட்டுல வந்துட்டா அந்தமாதிரி பந்தா எதுவும் காட்டிக்க மாட்டாங்க.. காட்டவும் அவங்களுக்கு தெரியாது.. அதேமாதிரி, சீரியஸ், காமெடி எதுனாலும் அப்படியே டக்குன்னு அதுக்கேத்த மாதிரி தன்னை மாத்திக்குறாங்க. பிந்துகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது அவங்களோட கண்கள் தான்… அப்கோர்ஸ் எல்லோருக்குமே அவங்க கண்களை ரொம்ப புடிக்கும் (சிரிக்கிறார்).. இதுவரைக்கும் நடிச்ச படங்கள்ல என்னோட ஹீரோயின்கள் என்னை விட உயரம் ரொம்பவே குறைவா இருந்தாங்க. ஆனா பிந்து மாதவி கிட்டத்தட்ட எனக்கு ஈக்குவல் உயரமா இருந்ததுல, அதுல எனக்கு இன்னொரு சந்தோஷம்.

சத்யசிவா கூட ஒர்க் பண்ண அனுபவம்..?

ரொம்ப தெளிவான ஆள்.. இந்தப்படத்துல என்னோட கேரக்டருக்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ண வேண்டாம்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.. ஸ்பாட்டுக்கு வந்தபின்னாடி தான் டயலாக்கையே கொடுப்பார். அதனால் இந்த மாதிரி தான் நடிக்கனும்னு வேற யாரையும் மைண்ட்ல ஏத்திக்காம, அவர் சொல்லி தந்த ரூட்டுல புதுசா பண்ண முடிஞ்சது. என்னை வேற ஒரு ஆளா மாத்தியிருக்கார் சத்யசிவா.

குறும்பட இயக்குனர்களோட வேலை பார்த்ததற்கும், சத்யசிவாவோட அணுகுமுறைக்கும் வித்தியாசத்தை உணர்ந்தீர்களா..?

சரியான கேள்விங்க… உண்மையிலேயே குறும்பட இயக்குனர்கள் படத்துல நடிக்கிறப்ப அது வேற மாதிரி பேட்டர்ன்.. அதுல டைரக்டர்ஸ் கதையை பத்தி, எங்களோட கேரக்டர் பத்தி எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணுவாங்க.. ஸ்பாட்லகூட உக்கார்ந்துகூட விவாதிப்போம்.. ஆனால் சத்யசிவா மாதிரி உதவி இயக்குனரா இருந்து இயக்குனரா மாறுனவங்க, தங்களோட நாயகன் கேரக்டர் இப்படித்தான் இருக்கணும் அவங்களா ஒரு உருவம் கொடுத்து பட்டைதீட்டி வச்சிருப்பாங்க.. அதை நம்மகிட்ட இருந்து வெளியே கொண்டு வர்ற வேலையை அவங்க அனுபவத்தை வச்சு சூப்பரா பண்ணிருவாங்க.. இவங்களுக்கு இது தெரிஞ்சா போதும்ங்கிறது அவங்க பாலிசி.. இந்தப்படத்தோட ஸ்க்ரிப்ட்டையே டைரக்டர் என்கிட்டே கொடுக்கலை.. அதனால நானும் என்ன பண்ணலாம்னு யோசிச்சு குழப்பிக்கலை.. என்னோட வேலையும் கொஞ்சம் ஈஸியாச்சுன்னும் சொல்லலாம். ஆனா டப்பிங்ல படத்தை பார்த்துட்டு ‘நல்லா பண்ணிருக்கீங்க.. இந்தமாதிரி படங்களை செலக்ட் பண்ணி பண்ணுங்க”ன்னு சத்யசிவா பாராட்டினார். அந்தப் பாராட்டே படத்தோட வெற்றியா நான் நினைச்சுக்கிட்டேன்..
ஆல் தி பெஸ்ட் அசோக் செல்வன்..

Comments