தமிழில் அடுத்த வசூல் சூப்பர் ஸ்டார் விஜய்தான்: 'புலி' 3500 திரையரங்குகளில் ரிலிஸ்!!!

4th of August 2015
சென்னை:பாகுபலி' படத்தையடுத்து மற்றுமொரு தென்னிந்தியத் திரைப்படமான 'புலி' திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்யவுள்ளனர். படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் ஏற்கெனவே விஜய் படங்களுக்கென தனி வரவேற்பு உண்டு. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி புலி உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட பல வெளிநாடுகளிலும் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். 
 
தமிழ்நாட்டில் சுமார் 1000 திரையரங்குகளிலும், ஹிந்தியில் சுமார் 1000 திரையரங்குகளிலும், தெலுங்கில் சுமார் 1000 திரையரங்குகளிலும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 500 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. பாலிவுட் படங்களே இத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆகுமா? என்றால் அரிதிலும் அரிது தான்.

இந்நிலையில் புலி அப்படி சொன்னது போல் இத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆனால், சாதனை தான். இந்தப் படம் மூலம் விஜய்க்கு சர்வதேச அளவில் ஒரு அடையாளத்தையும், தமிழில் அடுத்த வசூல் சூப்பர் ஸ்டார் விஜய்தான் எனவும் முன்னெடுத்துச் செல்ல உள்ளார்களாம்.

Comments