Vijay 59 Movie Pooja Stills!!! விஜய் 59 - மீண்டும் வாயில் சுருட்டை வைத்த விஜய்!!!

17th of July 2015
சென்னை:அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தலையில் தொப்பியுடன் ஸ்டைலாக சுருட்டு பிடிக்கிறார் விஜய்.



















துப்பாக்கிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சுருட்டு பிடிக்கும் படம் வெளியானது. விஜய்யை போன்ற ஒரு பிரபலம் சுருட்டு பிடித்தால் அது இளையதலைமுறையை தவறான திசைக்கு இட்டுச் செல்லும் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அது படத்தின் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம்.
 
படத்தில் விஜய் புகைப் பிடிக்கும் காட்சி இல்லை என படத்தின் இயக்குனர் முருகதாஸ் விளக்கமளித்தார். விஜய் சுருட்டு பிடித்தால் பிரச்சனையாகும் என்று தெரிந்தும் மீண்டும் அவர் வாயில் சுருட்டை திணித்திருக்கிறார்கள்.

Comments