Savarakkaththi Pooja Images!!! இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற மிஷ்கின்: வில்லனாக!!!

17th of July 2015
சென்னை:Tags : Savarakkaththi Movie On Location Photos, Savarakkaththi Shooting Spot Gallery, Savarakkaththi Film Latest Making images, Savarakkaththi Movie Team at Shooting Spot Pictures, Savarakkaththi New On Location Stills
 
இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற மிஷ்கின், ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வெற்றி பெற்றார். இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த மிஷ்கின், தற்போது 'சவரக்கத்தி' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.




























































































































இப்படத்தில் வில்லனாக நடிப்பது மட்டும் இன்றி, தனது லோன் ஒல்ப் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கும் மிஷ்கின், இப்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார்.
இப்படத்தை மிஷ்கினின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குகிறார். 
இயக்குனர் ராம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பூர்ணா நாயகியாக நடிக்கிறார்.  பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றிய வி.ஐ.கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு 'பிசாசு' படத்திற்கு இசையமைத்த அரோல் குரோலி இசையமைக்கிறார். கோபிநாத் படத்தொகுப்பு செய்ய, என்.சதீஷ்குமார் கலை துறையை கவனிக்கிறார். தினேஷ் காசி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் நேற்று சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

Comments