நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி; நினைவு இழந்த நிலையில் தீவிர சிகிச்சை!!!

31st of July 2015
சென்னை:நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 
சுவாச கோளாறு மற்றும் ரத்த கொதிப்பு காரணமாக நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரித்ததை அடுத்து சென்னை
 
வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அவரது உடல்நிலை இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Comments