சென்னை பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள திரைப்படங்களின் வசூல் நிலவரம்!!!

30th of July 2015
சென்னை:நான்காவது வார இறுதியில் கமலின் பாபநாசம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 11.70 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 4.20 கோடிகள். இது காக்கி சட்டை, அனேகன் படங்களின் வசூலைவிட குறைவு.
 
4. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

சென்ற வாரம் வெளியான இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்ய தவறிவிட்டது. முதல் மூன்று தினங்களில் சென்னை மாநகரத்தில் 14 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

3. பஜ்ரங்கி பைஜான்

சல்மானின் பஜ்ரங்கி பைஜான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படம் சென்றவார இறுதியில் 26 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 88.60 லட்சங்கள்.

2. மாரி

தனுஷின் மாரி இந்த வாரம் முதலிடத்திலிருந்து கீழிறங்கி இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 65 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 2.50 கோடிகள்.

1. பாகுபலி

இந்த வாரம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது பாகுபலி. பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு ஒரு படம் வருவது அபூர்வம். நான் ஈ போலவே அந்த அபூர்வத்தை இந்தப் படம் சாதித்துள்ளது. சென்ற வார இறுதியில் 94.50 லட்சங்கள் வசூலித்த இப்படம், இதுவரை சென்னையில் 5.52 கோடிகளை தனதாக்கியுள்ளது.

Comments