படத்திலும் ஜோடி! நிஜத்திலும் ஜோடி!!!

18th of July 2015
சென்னை:இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்ற அறிவிப்போடு ரசிகன் திரைப்படத்தில் விஜய் ஆடிப்பாடும் பாடல் சூப்பர்ஹிட். அந்தகால நடிகர்களைப் போல சொந்தகுரலில் பாடி, ஆடியது விஜய்க்கு மேலும் புகழை பெற்றுத்தந்தாலும், சிலகாலம் தவிர்க்கப்பட்டுவந்தது. ஆனால் துப்பாக்கி படத்தில் "கூகுள் கூகுள்" பாடல் பாடியதிலிருந்து, தற்போது ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்துவருகிறது. 
 
இப்படி விஜய்க்கு ஒருவரலாறு இருப்பதுபோல் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பாடகியாக மிகப்பெரும் வரலாறு இருக்கிறது. ஆனால் ஸ்ருதிஹாசன் முதலில் ஒரு நல்ல பாடகி. அதற்குப் பிறகு தான் நடிப்பெல்லாம். இப்படிப்பட்ட இரு சிங்கர்கள் கிடைக்கும் போது சும்மா விடுவாரா புலி பட மியூஸிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத்.
 
விரைவில் வெளியாக இருக்கும் 'புலி' திரைப்படத்தில் நடித்திருக்கும் சுருதி ஹாசன் ஒரு பாடலை வய்யுடன் ஜோடி சேர்ந்து பாடியிருக்கிறார். விஜய்யின் குரலுக்கும், ஸ்ருதியின் குரலுக்குமென்றே தனித்தனி ரசிகர்கள் இருக்க, அனைவரும் இந்த படத்தில் வரும் பாடலுக்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
 
படத்திற்காக சேர்ந்த ஜோடி, பாடகர்களாகவும் ஜோடி சேர்ந்திருப்பது மிகநீண்ட காலத்திற்கு பின் நடைபெறும் ஒரு செயல் என்பதால், புலி படக்குழுவினர் பெருமைப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கும் புலி திரைப்படத்தின் பாடல்கள் சக்கை போடு போடப்போகிறது மட்டும் உறுதி என்கின்றனர் புலி படக்குழுவினர். டீசர், பர்ஸ்ட்லுக் மாதிரி யாரும் திருடி வெளியிட்டுவிடாத அளவிற்கு பாதுகாப்புடன் வைத்து ரிலீஸ் செய்தால் சரி.

Comments