கனகா இடத்தை பிடிக்க ஆசைப்படும் லட்சுமி மேனன்!!!

25th of July 2015
சென்னை:தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப் பெற்ற சில படங்களை தற்போதுள்ள நடிகர், நடிகைகளை வைத்து ரீமேக் செய்கிறார்கள். ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து புகழ் பெற்றார். அதைத் தடோர்ந்து ரஜினி நடித்த 'தில்லு முள்ளு', 'முரட்டுக்காளை' ஆகியப் அப்டங்க்களும் ரீமேக் செய்யப்பட்டது.

மேலும், சில படங்களும் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், ராமராஜன் - கனகா ஆகியோரது நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற 'கரகாட்டக்காரன்' படத்தையும் ரீமேக் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த நடிகை லட்சுமி மேனன், கனகா நடித்த வேடத்தில் தனக்கு நடிக்க விருப்ப முள்ளதாக, தெரிவித்துள்ளார்.

Comments