18th of July 2015
சென்னை:திரிஷா மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். காலை 7.20 மணிக்கு ஆலந்தூரில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்றார். டிக்கெட் கவுண்டரில் 40 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினார்.
பின்னர் ரெயில் நிலையத்துக்கு உள்ளே நுழைந்தார். பெண் பாதுகாவலர்கள் மேட்டல் டிடெக்டரை வைத்து திரிஷாவை பரிசோதித்தனர். பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டார். எஸ்கலேட்டர் மூலம் நான்காவது மாடிக்கு சென்றார்.
பின்னர் கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரெயிலில் ஏறினார். திரிஷாவை பார்த்ததும் பயணிகள் குதூகலமானார்கள். அவருடன் மொபைல் போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
பின்னர் ரெயிலுக்குள் பயணிகளோடு உட்கார்ந்து திரிஷா பயணம் செய்தார். ரெயிலில் இருந்த படி வெளியே பார்த்து ரசித்தார். 7.45 மணிக்கு அரும்பாக்கம் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார்.
இது குறித்து திரிஷா கூறும்போது, ‘‘மெட்ரோ ரெயில் பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் சுத்தமாக இருந்தன. நியூயார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்து இருக்கிறேன்.
மன்மதன் அம்பு படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் உள்ள மெட்ரோ ரெயில்களில்தான் அதிகம் நடந்தது. அந்த ரெயில்களை விட நமது மெட்ரோ ரெயில் சிறப்பாக இருந்தது. ரெயிலில் இருந்து நமது நகரத்தை பார்க்கும் போது திரில்லிங் ஆக இருந்தது’’ என்றார்.

Comments
Post a Comment