எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்!!!

12th of July 2015
சென்னை:ஷாம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் படம் 'ஆக்கோ'. ரேபிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தீபன் பூபதி, இதேஷ் வேலு ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அனிருத்தை முதன்மைப்படுத்தி இப்படத்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படத்திற்காக அனிருத் இசையமைத்து பாடிய "எனக்கென யாரும் இல்லையே..."என்ற பாட்டால் சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
இதற்கிடையில், இந்த பாடலில் அணிருத்தையே நடிக்க வைத்து படம்பிடிக்க முடிவு செய்த இயக்குனர் ஷாம், அணிருத்துடன் எமி ஜாக்சனையும்  ஆட  வைக்கப்போகிறார்.
இந்த ஒன்றை பாடலில் ஆடுவதற்கு எமி ஜாக்சனும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனால், எமியுடன் டூயட் பாடுவதற்கு அனிருத் தயாராகி வருகிறார்.

Comments