மீண்டும் தேவாவுடன் கூட்டணி அமைத்த விஜய்!!!

18th of June 2015
சென்னை:இளைய தளபதியின் படத்தில் எப்போதும் பாடல்கள் தான் முதலில் அனைவரையும் கவரும். இதனால், தன் படங்களின் பாடல்களில் விஜய் தனி கவனம் செலுத்துவார்.

விஜய்யின் குஷி, பகவதி என படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.

இவர் கானா பாடல்களுக்கு பிரபலம், தேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்க்காக அட்லீ இயக்கும் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
 
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை. இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments