அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்திற்கு அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களா?!!!

1st of February 2015
சென்னை:அஜித் படம் வருகிறது என்றாலே தமிழக திரையரங்குகளில் திருவிழா தான். இந்நிலையில் மங்காத்தா படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் ஓவர்சிஸிலும் உயர்ந்து விட்டது.

ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்த வெற்றி அஜித்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலும் நன்றாக இருக்கிறது.

எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் முன்னேறி வந்ததும், ரசிகர் மன்றங்களை கலைத்து உட்பட அவருடைய வெளிப்படையான அணுகுமுறையுமே அவருக்கு அங்கே உள்ள ஆதரவுக்கு முக்கிய காரணமாகும்.

இந் நிலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 95 தியேட்டர்களில் அமெரிக்காவில் வெளியாகிறது.

முன்னதாக 'ஆரம்பம்' 78 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. வீரம் படம் 80 அரங்குகளில் வெளியானது. இப்போது 95 அரங்குகளில் என்னை அறிந்தால் வெளியாகிறது.
 
கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக 9 தியேட்டர்களிலும், இலனாய்-ல் 8, டெக்சாஸில் 5, நியூ ஜெர்சியில் 5, ஒஹயோவில் 5, ஃப்ளோரிடாவில் 4, பிலடெல்பியாவில் 4 , மிசிகன் 4 உட்பட 36 மாகாணங்களில் என்னை அறிந்தால் படத்தை. அட்மஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

Comments