Producer Council Election Stills சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: கலைப்புலி எஸ்.தாணு தலைவராக தேர்வு!!!

26th of January 2015
சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2015-2017-ம் ஆண்டுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
 
இந்த சங்கத்தில் சில நடிகர்-நடிகைகள் மற்றும் டைரக்டர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஓட்டு போட தகுதியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 967 பேர். ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. தயாரிப்பாளர்கள், டைரக் டர்கள், நடிகர்-நடிகைகள் ‘கியூ’வில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன், நாசர், பிரகாஷ்ராஜ், உதயநிதி ஸ்டாலின், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், நடிகைகள் ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஜெயசித்ரா, டைரக்டர் கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், சரண், பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன் உள்பட மொத்தம் 770 பேர் ஓட்டுப்பதிவு செய்தார்கள்.
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர் அலிகான், ஹென்றி, ராஜேந்திரன் ஆகிய 5 பேர் போட்டியிட்டார்கள். அதில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு வெற்றி பெற்று, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Council Election Stills













Comments