விஜயகாந்துடன் கைகோர்த்த ரஜினி, விஜய்: - புதிய தகவல்!!!

22nd of January 2015
சென்னை:தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் ஏக பொருத்தம். இதை முதலில் துவங்கி வைத்தது அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர். தான். அதன் பிறகு நி நான் என போட்டி போட்டுக்கொண்டு நடிகர், நடிகைகள் அரசியலில் குதித்தனர். இதில் விஜயகாந்த்தும் அடங்குவார். யார் யாரோ அரசியல்ல குதிக்கிறாங்கோ, ஆனா வரேன்னு சொன்னவர் மட்டும் இன்னும் வரல.

சரிி விசயத்துக்கு போவோம்...
விஜயகாந்த் தன்னோட மூத்த மகன் ஷண்முக பாண்டியன் ஹீரோவா அறிமுகமாகிற சஹாப்தம் படத்தோட ஆடியோ ரிலீஸ் விழாவ ரொம்பவே சிறப்பா நடத்த முடிவெடுத்திருக்காரு. இதுக்கு அவர் தயாரிச்சிருக்கிற அழைப்பாளர் பட்டியல் ரொம்பவே பெரிசுன்னு, கூட இருக்கறவங்க சொல்லிட்டிருக்காங்க,
அதுல முக்கியமான முதல் இடத்துல இருக்கிறவர் ரஜினிகாந்த். ரஜினி தலைமைல விழா நடக்கறது முடிவாகிகிடிச்சின்னும் அவரும் சம்மதம் சொல்லிட்டாருன்னும் உறுதியான தகவல்கள் வந்துள்ளது.
இதுல அடுத்த இடத்துல இருக்குறது விஜய் தான். செந்தூரப்பாண்டி படத்துல விஜயகாந்த்துடன் விஜய் நடித்து போல், தன் மகனையும் மேல கொண்டுபோகணும்னு விஜய்க்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம். விஜய் வந்தா படத்தோட வேல்யூ இன்னும் அதிகமாகும்னு கேப்டன் எதிர்ப்பாக்கிறதாகவும் சொல்றாங்க. 
இந்த விழா வெறும் சினிமா விழா தான். ஆனா மும்மூர்த்திகள் இப்படி விழா மேடையில சந்திச்சா... சும்மா இருக்குமா சங்கு... இது அரசியலுக்கான அடிக்கல் நாட்டு விழா என்கிற அளவில் அரசியல் வட்டாரத்தில் தீயை பற்ற வைத்துள்ளனர். அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே.... இது மத்தவங்க மைண்ட் வாய்ஸ்.

Comments