மீண்டும் தமிழ்ப் படத்தில் நீது சந்திரா - ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்!!!

23rd of January 2015
சென்னை:ஆதி பகவன் படத்தில் நடித்த நீது சந்திரா, திலகர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். ஏறக்குறைய ஒரு வருடத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில். விரைவில் ஷாஜி கைலாஷ் இயக்கும் தமிழ்ப் படத்தில் நீது சந்திரா ஹீரோயினாக நடிக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், தமிழ் சினிமாதான் எனக்கு ஓர் அடையாளத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்தது என்றார். அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது.

படத்தில் நடிப்பவர்கள், படத்தின் பெயர் உள்பட பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர். 

Comments