ஷமிதாப் படத்தில் தனுஷ் நுழைந்த பின்னனி என்ன…???!!!

23rd of January 2015
சென்னை:அமிதாப்பச்சன், தனுஷ், அக்‌ஷராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ஷமிதாப்’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பால்கி. இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வரும் பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
 
இப்படத்தில் தனுஷ் நடிகராகவும், அவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். இது தமிழ் சினிமாவில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவலாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.

இந்நிலையில், இயக்குநர் பால்கி ‘ஷமிதாப்’ கதையை முதலில் அமிதாப் பச்சனிடம் கூறியபோது முழுக்கதையையும் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, அந்த நடிகர் வேடத்தில் யாரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார் அமிதாப் பச்சன்.
 
ரஜினி அல்லது தனுஷ் மாதிரியான தென்னிந்திய நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூற, “தனுஷிடம் பேசுங்கள்” என்று தனுஷை பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.
இப்படத்தின் மூலம் தனுஷ் ஹிந்தி மற்றும் தமிழில் திரையுலகயில் அடுத்த கட்டத்துக்கு செல்வார் என்கிறது படக்குழு.

Comments