கார்த்திக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா!!!

17th of January 2015
சென்னை:விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘கஸ்மோரா’. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார்.
 
இதில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் கார்த்திக்கு ஒரு ஜோடியாக நயன்தாரா ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், மற்றொரு கார்த்திக்கு ஜோடி தேடும் படலம் நடந்து வந்தது.

தற்போது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரியில் தொடங்கவிருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்பன்’ படத்தின் டிரைலர் நேற்று பொங்கலன்று வெளியானது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Comments