கெத்து படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன்!!!

3rd of December 2014
சென்னை:உதயநிதி ஓகே ஓகே , இது கதிர்வேலன் காதல் படங்களை அடுத்து தற்போது நண்பேண்டா படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
 
இப்படத்தை அடுத்து இதயம் முரளி , கெத்து என இரண்டு படங்களில் நடிக்க உள்ளார், இதில் கெத்து என்ற படத்துக்கு சமிபத்தில் பூஜை நடைபெற்று முடிந்தது, கெத்து படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி .ஜாக்சன் நடிக்க உள்ளார்,

இப்படத்தை மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்க உள்ளார், கெத்து படம் டி .இமான் இசையில் உருவாக உள்ளது, கெத்து படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு இப்படத்தை தனது ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Comments