சூர்யா வெளியிட நண்பேன்டா பாடல்களை ஆர்யா பெற்றுக் கொள்கிறார்!!!

 20th of December 2014
சென்னை:உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிக்கும் நண்பேன்டா படத்தை ஏ.ஜெகதீஷ் இயக்குகிறார். இவர் ராஜேஷ்.எம்மின் உதவியாளர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.இந்த நிலையில் படத்தின் பாடல்கள் வருகிற 23ந் தேதி மாலை 6 மணிக்கு சத்யம் தியேட்டரில் வெளியிடப்படுகிறது.
சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக் கொள்கிறார். இயக்குனர் ராஜேஷ்.எம் டிரைய்லரை வெளியிடுகிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
 
வைரமுத்து, மதன்கார்க்கி, பா.விஜய், தாமரை, நா.முத்துகுமார், விஜய் பாஸ்கர் எழுதியுள்ளனர். விஜய் பிரகாஷ், மேகா, உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, ரிச்சர்ட், ஆண்ட்ரியா, மிஸி நாயர், அர்ஜுன் மேனன், மெக் விக்கி, கானா பாலா, உஜ்ஜெயினி ராய், ஹரிச்சரண், பிரவீன் சைவி, பாடி உள்ளனர்.

Comments