கொம்பன்’ படப்பிடிப்பு முடிந்தது - டப்பிங் பணிகள் தொடங்கியது!!!

15th of December 2014
சென்னை:மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு கார்த்தி ‘கொம்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார். கோவை சரளா, ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை முத்தையா இயக்குகிறார். இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கியுள்ளார்.

’கொம்பன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் டப்பிங் பணிகளை முடிக்க வேண்டும் என்ற முடிவில் பணியாற்றி வரும் இப்படக்குழுவினர், இம்மாதம் இறுதியில் கொம்பன் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். படத்தை பொங்கல் பண்டியையன்று வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments