‘மாஸ்’ படத்தில் தனுஷ்-உதயநிதியுடன் ரொமான்ஸ் செய்ய காத்திருக்கும் எமி ஜாக்சன்!!!

3rd of December 2014
சென்னை:எமிஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதைத் தொடர்ந்து சூர்யா-வெங்கட் பிரபு இணைந்துள்ள ‘மாஸ்’ படத்திலும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ், உதயநிதி ஆகியோருடன் இன்னும் பெயரிடப்படாத படங்களிலும் நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வேலையில்லா’ பட்டதாரி படத்தைத் தொடர்ந்து தனுஷ்-வேல்ராஜ்-அனிருத் கூட்டணி இணைந்து மீண்டும் ஒரு படத்தை எடுக்கவிருக்கிறது. இந்த படத்தில்தான் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார். இதை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.

அதேபோல், ‘மான்கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்திலும் எமிஜாக்சன் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு சுகுமார் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். பிற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

Comments