தமிழ் திரைப்பட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்!!!

24th of December 2014
சென்னை:பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 7 மணிக்கு காலமானார்.  நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 100 படங்களை இயக்கியுள்ளார். 

வாழ்க்கைக் குறிப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார்.  பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார்.  பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். அண்ணாமலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியராக பணியை தொடங்கினார். ஆசிரியர் பணிக்கு பின் சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

சென்னையில் பணிபுரிந்த போது நாடகத்துறையில் பாலசந்தர் தடம் பதித்தவர். எம்ஜிஆர் அழைப்பை ஏற்று 1965-ல் தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். நீர்க்குமிழி படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக பாலசந்தர் தடம் பதித்தார். மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா, விஜயம் படங்களை இயக்கினார். இயக்குநர் சிகரம் என பாலசந்தர் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

பால்கே விருது பெற்றவர்

இந்திய திரையுலகின் தலைசிறந்த பால்கே விருது பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர் ஆவார். 1969&ல் இயக்கிய இருகோடுகள் படத்துக்கு முதல் முதலாக தேசிய விருது பெற்றார். அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர் உள்பட ஏராளமான படங்கள் விருது பெற்றுள்ளன. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளத்திலும் படங்கள் இயக்கியவர்.

ரஜினி, கமலை அறிமுகம் செய்தவர்

ரஜிகாந்த், மற்றும் கமல்ஹாசனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் கே.பாலசந்தர் ஆவார். பிரகாஷ்ராஜ், சுஜாதா, ஷோபா, படாபட் ஜெயலட்சுமியும் பாலசந்தரின் அறிமுகமே ஆகும். தம் கவிதாலயா நிறுவனம் மூலம் ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தார். விவேக், சரிதா உள்பட 65&க்கும் மேற்பட்டோரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நாளை மறுநாள் இறுதிச்சடங்கு

கே.பாலசந்தரின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என பாலசந்தரின் மகன் தொவித்துள்ளார்.

கருணாநிதி அஞ்சலி

கே.பாலசந்தர் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மருத்துவ மனையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கே.பாலசந்தருக்கு வைகோ இரங்கல்


மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் பேசிய வைகோ இரங்கல் தெரிவித்தார்.
திரையுலகினர் அஞ்சலி


இயக்குநர் கே.பாலசந்தர் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமார் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

கே.பாலசந்தருக்கு ஜெயலலிதா இரங்கல்

சென்னை: இயக்குநர் கே.பாலசந்தரின் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். திரையுலகில் பாலசந்தர் விட்டுச் சென்ற இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்றும் பாலசந்தரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தரை உலகினருக்கும் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி இலக்கனம் வகுத்தவர் கே.பாலசந்தர் ஆவார்.

Comments