விஜய் சிம்புதேவன் படத்தை குறித்து ஹன்சிகா பேசியது!!!

2nd of December 2014
சென்னை::விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ஹன்சிகா, ஸ்ருதி என இரண்டு கதாநாயகிகளுடன் நடித்து வருகிறார்.
தற்போது ஹன்சிகா இப்படத்தை குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் ,
 
அதில் ஹன்சிகா நான் ஏற்கனவே விஜயுடன் வேலாயுதம் படத்தில் நடித்து இருக்கிறேன் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜயுடன் இணைந்து நடித்து வரும் இப்படம் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகிவருகிறது, இப்படத்தில் நான் ராணியாக நடிக்கிறேன்

சமிபத்தில்தான் முதற்கட்ட படபிடிப்பு முடிந்தது, முதற்கட்ட படபிடிப்பில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன், தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்புக்காக கேரளா செல்ல உள்ளதாக தெரிவித்துயிருந்தார் .

Comments