மீகாமன் விமர்சனம்: மீகாமன் ஒரு சூப்பர் மேன்!!!

27th of December 2014
சென்னை:கேங்ஸ்டர்களின் இருண்ட உலகத்தை சென்ற படத்தில் காட்டி மிரட்டிய மகிழ் இந்த படத்திலும் சாக்லேட் பாய் ஆர்யாவை அந்த இருண்ட உலகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

மீகாமன் என்று தலைப்பிலேயே வித்தியாசம் காட்டியவர் படத்தில் ஒன்றும் செய்யாமலா இருப்பார். முந்தைய படத்தை விட ஒரு படி மேலே ஆர்யா, ஹன்சிகா என பெரிய ஸ்டார் கேஸ்டிங்கில் இறங்கி அடித்துள்ளார் இயக்குனர்.

கோவாவில் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வலம்வருபவன் ஜோதி. இவன் பெயரைத் தவிர, அவன் யார்? எப்படி இருப்பான்? என்பது யாருக்குமே தெரியாது. அவனுடைய நெருங்கிய கூட்டாளிகளுக்குகூட ஜோதி பற்றிய எந்த விவரமும் தெரியாது.

அப்படியிருக்க அவன் கேங்கை ஒற்றை ஆளாக வேட்டையாட ஆர்யா போக்கிரி ஸ்டையிலில் அண்டர்கிரவுண்ட் ஆப்ரேஷனில் இறங்குகிறார்.

சிறு சிறு வேலையாக செய்து ஜோதியின் நண்பரிடம் நற் பெயரை வாங்கி ஒரு வலது கரமாக திகழ்கிறார் ஆர்யா.

ஒரு கட்டத்தில் ஜோதியின் சரக்கு ஒன்று காணாமல் போக, அவர் குரூப்பிலே யாரோ எடுத்துள்ளார்கள் என்று சந்தேகம் எழ, ஜோதி வெளியே வந்தாரா? ஆர்யா தனி ஆளாக அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார் என்று தூள் பறக்கும் திரைக்கதையுடன் கூறியிருக்கிறார் இயக்குனர்.

ஆர்யா என்றாலே சாக்லேட் பாய், டூயட் மட்டும் தான் பாடுவார் என்று கூறி வந்த நிலையில் இந்த படத்தில் ஆக்‌ஷனில் பட்டையை கிளப்புகிறார்.

அதிலும் வில்லன்களிடம் மோதும் காட்சியில் அவர் கண்களே மிரட்டுகிறது.யார் அந்த ஜோதி என்று ஹைப் ஏற்றி இறுதியாக அஷுடேஷ் ராணா வர திரையரங்கில் செம்ம ரெஸ்பான்ஸ். ஹன்சிகா வழக்கம் போல் வந்து போகும் கதாபாத்திரம் தான் என்றாலும் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரம் அஷுடேஷ் ராணா கலக்கியிருக்கிறார். அதிலும் குறிப்பாக சின்ன சின்ன மேனரிசங்களில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

ஆர்யா மொத்த படத்தையும் தன் கேரக்டரில் தாங்கி பிடிக்கிறார். வேகமான திரைக்கதை படத்திற்கு பெரிய பலம்.தமனின் பின்னணி இசையில் செம்ம ஸ்கோர் செய்கிறார் தமன். எஸ்.ஆர். சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும் இருண்ட உலகத்தை அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

ஹன்சிகா கதாபாத்திரம் கொஞ்சம் படத்தின் வேகத்தை குறைக்கிறது. சில நெருட வைக்கும் காட்சிகள் மற்றபடி ஏதும் இல்லை.
 
மொத்தத்தில் மீகாமன் பாக்ஸ் ஆபிஸை ஆண்டின் இறுதியில் கைப்பற்ற வந்த சூப்பர் மேன்.

Comments