தாறுமாறு கலெக்சன் தமிழில்..! எகிறுது ரைட்ஸ் தெலுங்கில்..!! சுக்கிரதிசையில் சிபிராஜ்!!!

9th of December 2014
சென்னை:திறமையிருந்தாலும் கூட அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக தனது  நாலு வருட காத்திருப்பு வீண்போகாதவாறு ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலமாக வெற்றிவாகை சூடியிருக்கிறார் சிபிராஜ்.
 
இதில் சிபிராஜின் வெற்றி என்பது ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு தயாரிப்பாளராக குடும்பம் குடும்பமாக மக்களை தியேட்டருக்கு வரவழைத்ததில் தான் இருக்கிறது. “அப்பா டாக்கியை பாக்க இன்னொருக்கா போலாம்பா” என குட்டீஸ்கள் பல இடங்களில் மீண்டும் அப்பாக்களின் கையை பிடித்து இழுக்க, விளைவு.. படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் சோடை போகாத வசூல்…

தமிழ்நாட்டில் கடந்த ஞாயிறு இரவு நிலவரப்படி 7.7 கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது வசூல். சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் 2.5 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இது இல்லாமல் ஆடியோ ரைட்ஸுடன், கேரளா, கர்நாடகா மற்றும் ஓவர்சீஸ் கலெக்சன் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட வசூல் ஒரு கோடியை தொட்டுள்ளது.
 
ஆரம்ப கட்ட வரவேற்பை வைத்து சுமார் எட்டு கோடிகளை தொடும் என எதிர்பார்த்த படம், இப்போது 11 கோடியை தாண்டிவிட்டது. அதுமட்டுமல்ல தெலுங்கில் இருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் யூகிக்க முடியாத தொகைக்கு இதன் ரீமேக் ரைட்ஸை கைப்பற்ற க்யூவில் நிற்கின்றன.  குழந்தைகளை கவரும் படம் வெற்றிபெற தவறியதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இனி சிபிராஜின் பாதையை அவர்தான் தீர்மானிக்கவேண்டும்.

Comments